புதுடெல்லி: சீன நிபுணர்களுக்கான வர்த்தக விசாக்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவதாக அதுபற்றி விவரமறிந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள உற்பத்தியை இழக்கும் நாள்பட்ட தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கியப் படியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு தண்டனையால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெய்ஜிங்குடனான உறவை மீண்டும் புதுப்பிப்பதில் எச்சரிக்கையுடன் கவனம் செலுத்தி வருகிறார்.
சீன நிபுணர்களுக்கான பல அடுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் ஒரு மாதத்துக்கும் குறைவான நேரத்தில் விசா வழங்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
இருதரப்பில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
ஆனால், இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சு அல்லது பிரதமர் அலுவலகம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

