இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 63, இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக இதுபற்றி தகவலறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் திங்கிள்கிழமை (டிசம்பர் 26) தெரிவித்தார்.
"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நலமாக உள்ளார்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் கூறினார். திருவாட்டி நிர்மலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. நிதி அமைச்சு இதுபற்றி கருத்து கூறவில்லை.
2023 பிப்ரவரி 1ஆம் தேதி வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் வேளையில், திருவாட்டி நிர்மலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

