இந்தியா: உலகிலேயே முதல்முறையாக 22 மொழிகளில் நாடாளுமன்ற நடவடிக்கை

1 mins read
575c8571-588e-418c-8374-e3aa8c644f44
உலகிலேயே ஒரே நேரத்தில், 22 மொழிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கிடைக்கும் ஒரே நாடு இந்தியாதான்,” எனப் பெருமிதத்தோடு லோக்சபா நாயகர் ஓம் பிர்லா கூறினார். - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தி, ஆங்கிலம், தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா உள்ளிட்ட 18 மொழிகளில் இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த வரிசையில், காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி ஆகிய மொழிகளும் இணைந்துள்ளன.

இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் லோக்சபா நாயகர் ஓம் பிர்லா வெளியிட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இனி 22 மொழிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கலாம் எனக் கூறிய அவர், “உலகிலேயே ஒரே நேரத்தில், அத்தனை மொழிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கிடைக்கும் ஒரே நாடு இந்தியாதான்,” எனப் பெருமிதத்தோடு கூறினார்.

அந்நாட்டின் பன்முகத்தன்மையை இது பிரதிபலிப்பதாகவும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களின்போது தாய்மொழிகளில் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மொழி தெரியாத உறுப்பினர்கள் அவதிப்பட்டனர். தற்போது, அனைத்து மொழிகளிலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மொழி பெயர்க்கப்படுவதால் உறுப்பினர்கள் பயனடைவர்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்