தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் இருந்து இலங்கைக்கு முதல் அனைத்துலகக் கப்பல் சேவை தொடங்கியது

1 mins read
01ad9d12-b235-4cb7-a222-5a256a4ac211
படம்: டுவிட்டர் -

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முதல் அனைத்துலகக் கப்பல் சேவை ஜூன் 5ஆம் தேதி முதல் தொடங்கியது.

கிட்டத்தட்ட 750 பயணிகளுடன் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் புறப்பட்டது.

ஐந்து நாள் பயணத்தை இந்திய கப்பல்துறை அமைச்சர் சர்பநந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

எம்வி எம்பரஸ் என்ற அந்த கப்பலில் கிட்டத்தட்ட 3,000 பயணிகள் தங்க வசதி உண்டு.கப்பல் திருக்கோணமலை, ஹம்பன்டோட்டா, ஜாஃப்னா ஆகிய மூன்று துறைமுகங்களுக்கும் செல்லும்.

சென்னையை கப்பல் பயணத்திற்கான மையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அமைச்சர் சர்பநந்தா கூறினார்.

சென்னை துறைமுகத்தில் சரக்கு ரீதியான கப்பல்கள் தான் அதிக அளவில் வரும் தற்போது பயணத்திற்காக கப்பல்கள் வருவதால் குடிநுழைவு, பயணப்பைகள் எடுத்துகொள்வது போன்ற வசதிகள் ஓரளவு தான் உள்ளன.

சென்னை துறைமுகத்தில் அனைத்து விதமான வசதிமிக்க கட்டமைப்புகள் உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சர்பநந்தா தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுகமும் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்காலத்தில் அந்த துறைமுகத்திலும் பயணவசதிகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்