தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று வகை அரிசிகளுக்கு ஏற்றுமதி வரிக் குறைப்பு

2 mins read
91a8eef9-2558-4933-bd65-9c67e411cf0c
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் வட மாநிலமான சீதாபூர் சந்தையில் கடந்த அக்டோபர் 20, 2023 அன்று ஊழியர்கள் நெல் மூடைகளை எடைபோட்டு அடுக்குகிறார்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய அரசு மூன்று வகை அரிசிக்கான ஏற்றுமதி வரி 20 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, நெல், புழுங்கல் அரிசி, தீட்டாத அரிசிக்கான ஏற்றுமதி வரி 20 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரிக் குறைப்பு உடனடியாக நடப்புக்கு வரும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

உலகில் ஆக அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியாவில் அரிசி இருப்பு அதிகரித்துள்ளது. வரவிருக்கும் வாரங்களில் புதுநெல்லை விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர்.

ஏற்றுமதி வரிக் குறைப்பினால் இந்தியாவின் ஏற்றுமதிச் செலவு குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும், மேலும், தாய்லாந்து, வியட்னாம், பாகிஸ்தான், மியன்மார் போன்ற போட்டி நாடுகளும் விலைக்குறைப்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரி இல்லை. ஆனால் தனியார் வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவார்களா அல்லது வர்த்தகம் அரசு-அரசாங்க ஒப்பந்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில், ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா போன்ற வெளிநாட்டுச் சந்தைகளை அணுக முடியவில்லை என்று புகார் கூறிய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உதவ, அரசாங்கம் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான தரை விலையை நீக்கியது.

இந்திய உணவுக் கூட்டமைப்பு செப்டம்பர் 1ஆம் தேதி அரிசி கையிருப்பு 32.3 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது எனக் குறிப்பிட்டது, இது கடந்த ஆண்டை விட 38.6% அதிகமாகும், இது அரிசி ஏற்றுமதி தடைகளை தளர்த்த அரசாங்கத்திற்கு நிறைய இடமளிக்கிறது.

அதிகமான பருவமழையால் விவசாயிகள் 41.35 மில்லியன் ஹெக்டரில் நெல் பயிரிட்டுள்ளனர். ஐந்தாண்டுகளில் 40.1 மில்லியன் ஹெக்டர் சராசரி நிலப்பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்