புதுடெல்லி: இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 8%, அதாவது ஏறக்குறைய 120,000 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டுள்ளன.
ஆக அதிகமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 16,000க்கும் அதிகமானவை ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆந்திரா (12,386), ராஜஸ்தான் (10,878), உத்தரப் பிரதேசம் (8,040) ஆகியவை அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாடு இல்லை. இது 2021-22ஆம் ஆண்டு நிலவரம்.
மாணவர்-ஆசிரியர் விகிதத்தைப் பொறுத்தமட்டில், ஆக மோசமான மாநிலங்களில் பீகார் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொடக்கப் பள்ளிகளில் 60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமை காணப்படுகிறது.
சிறிய மாநிலங்களில் இவ்விகிதம் மேம்பட்ட அளவில் இருக்கிறது.
நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருக்கிறது. புதுச்சேரி, சண்டிகர், டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் எல்லாப் பள்ளிகளிலும் இணைய வசதி உள்ளது. தமிழ்நாட்டில் 24.7 விழுக்காட்டுப் பள்ளிகள் மட்டுமே இணைய வசதியைக் கொண்டுள்ளன. அ
ண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களையும் ஊடகச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.