தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாகப் பாய்ச்சிய இந்தியா

1 mins read
2452b5ff-c61c-4e85-9b28-9cd935151813
ஏவுகணை 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தாக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா அதன் உள்நாட்டிலேயே தயாரித்த நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை (Hypersonic Missile) வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது.

ஏவுகணை சோதனை சனிக்கிழமை (நவம்பர் 16) ஒடிசாவின் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த வெற்றியின் மூலம் சக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது.

சீனா, ர‌‌ஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை தயாரிப்பில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவும் அதில் வளர்ச்சி கண்டு வருகிறது.

ஏவுகணையை வெற்றிகரமாகப் பாய்ச்சியது வரலாற்றுச் சாதனை என இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

DRDO எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இந்த ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்தது. ஆயுதப்படையின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் இச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தாக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்