தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தாயகம் இந்தியா: மோடி பெருமிதம்

2 mins read
74057200-0565-4f83-8058-c16c0f6f66cb
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: புதிய சுகாதார, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தாயகமாக இந்தியா விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புது வாழ்க்கை மூலம் அரசாங்கத் தலைவராக நாட்டிற்குச் சேவை செய்யத் தொடங்கி 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாடு முழுவதும் பெண்கள், இளையர்கள், விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தது தனது முன்னோடி முயற்சிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளியலில் இந்தியா பிரகாசமான இடத்தைப் பிடித்துள்ளதாக மோடி தமது சமூக ஊடகப்பதிவில் கூறியுள்ளார்.

அரசாங்கம் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதே மக்களின் உணர்வாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“மக்களின் தொடர்ச்சியான நம்பிக்கை, பாசத்திற்கு நன்றி. தேசத்திற்குச் சேவையாற்றுவது மிக உயர்ந்த மரியாதை, நன்றியுணர்வுடன் கூடிய ஒரு கடமை.

“கடந்து சென்ற ஆண்டுகள் பல அனுபவங்களால் நிறைந்தவை. குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அம்மாநிலம் ஒருபோதும் உயர முடியாது என்று பலர் நம்பினர். விவசாயிகள் உட்பட சாதாரண குடிமக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து அடிக்கடி கவலை தெரிவித்தனர்.

“விவசாயம் போராடி வந்தது. தொழில்துறை வளர்ச்சி நிலைகுத்தியது. ஆனால், கூட்டு முயற்சிகளால் குஜராத்தை நல்லாட்சியின் சக்தி மையமாக மாற்றினோம்,” என்று மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத் இருந்தது என்றும் பின்னர் விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக உருவெடுத்தது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்