இந்தியாவில் தற்போது கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. அதனால் அந்நாட்டு மருத்துவமனைகளில் விழிப்பு நிலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்திய சுகாதார அமைச்சு, நெருக்கடி காலத்தில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக சோதனைப் பயிற்சிகளையும் செய்யத் தொடங்கியுள்ளன.
ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 11ஆம் தேதிகளில் மருத்துவமனைகளில் சோதனைப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
கொவிட்-19 நோய்ப்பரவலை குறைக்கும் நோக்கில் மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு கொவிட்-19 நோய்ப்பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்தது. அதனால் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் படுக்கைகளும் உயிர்வாயும் இல்லாமல் பலர் மாண்டனர்.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) அன்று புதிதாக 6,000 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

