இந்தியாவின் ஆக நீளமான சரக்கு ரயில் சேவையைத் தொடங்கியது

1 mins read
583898d8-eda9-4ea8-b24d-50614505f298
சனிக்கிழமை தனது சேவையைத் தொடங்கிய ருத்ராஸ்த்ரா ரயில் ஏறத்தாழ 4.5 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே மிகவும் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சு தொடங்கி உள்ளது.

ஏறத்தாழ 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட அந்த ரயிலில் ஏழு எஞ்சின்கள் இணைக்கப்பட்டு இருக்கும்.

ருத்ராஸ்த்ரா என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த ரயில் பற்றிய விவரங்களை மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்துள்ளார்.

“உலகத்திலேயே ஆக நீளமான இரண்டாவது சரக்கு ரயில் என்ற பெருமையையும் அந்த ரயில் பெற்றுள்ளது. முதலிடத்தில் ஆஸ்​திரேலி​யா​வின் பிஎச்​பி ரயில் (7.3 கிலோ மீட்​டர் நீளம், 682 வேகன்​கள்) உள்​ளது.  ருத்​ராஸ்த்ரா ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் கஞ்ச்​க​வாஜா ரயில் நிலை​யத்​தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) முதல் பயணத்தைத் தொடங்கி உள்ளது.

“சராசரி​யாக மணிக்கு 40 கிலோமீட்​டர் வேகத்​தில் சென்று 5 மணி நேரத்​தில் 200 கிலோ மீட்​டர் தூரத்தை அந்த ரயிலால் கடக்கமுடியும். நேரத்தை சேமிப்​ப​தோடு, அந்த ரயிலை இயக்​கு​வதற்​கான செல​வும் குறைவு,” என்று அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்