‘ஏஐ’ தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலை: ஆய்வு

1 mins read
9999a4cd-85b1-4dd5-ad59-2ff798d645fb
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ந்துவரும் துறைகளில் செயல்படுத்துவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (Boston Consulting group) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் அனைத்துலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும் குறிப்பாக, மென்பொருள், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ‘ஏஐ’ பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 விழுக்காட்டு இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “‘ஏஐ’ தொழில்நுட்ப செயலாக்கத்தின் அனைத்துலக சராசரி 26 விழுக்காடாக உள்ள நிலையில், இந்தியா அதனை விஞ்சி 30 விழுக்காட்டை எட்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் 74 விழுக்காட்டு நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டால் ஏற்படும் மாற்றத்தை இன்னும் முழுமையான அளவில் உணராமல் உள்ளன,” என போஸ்டன் குழுமத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்