புதுடெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டில் உலகிலேயே ஆக அதிக முறை இந்தியாவில்தான் இணைய சேவை முடக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் உலகளவில் பதிவான 187 இணைய சேவை முடக்கப்பட்டது. அவற்றில் 84 இணைய சேவை முடக்கம் இந்தியாவில் இடம்பெற்றது. அதிலும் குறிப்பாக, காஷ்மீரில் 49 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆக்சஸ் நவ்' எனும் இணைய சேவைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி இணைய சேவைத் துண்டிப்பில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு 2022ல்தான் இந்தியாவில் இணைய சேவை முடக்க நிகழ்வுகள் 100க்குக் கீழ் பதிவாயின.
உக்ரேனும் (22 முறை) ஈரானும் (18 முறை) அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தன.

