தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: வெப்ப தாக்கத்தால் 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

1 mins read
2e927356-3243-4de8-9fc3-110d0e79adea
இந்தியாவில் 7,192 பேர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் 7,192 பேர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாண்டு மாரச் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் 24ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 14 பேர் கடுமையான வெப்பத்துக்குப் பலியாயினர் என்று பிடிஐ நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 48,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 159 பேர் மாண்டதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் வெளியிட்ட தகவல்கள்படி பெரும்பாலான வெப்ப தாக்கச் சம்பவங்கள் கோடைக்காலம் உச்சத்திலிருந்த மே மாதத்தில் பதிவாயின. 2,962 பேர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. மூவர் மாண்டனர்.

ஏப்ரல் மாதம் 2,140 சம்பவங்களும் ஆறு மரணங்களும் பதிவாயின. மார்சில் 705 சம்பவங்களும் 2 மரணங்களும் ஏற்பட்டன.

ஜூன் மாதத்தில் 24ஆம் தேதிவரை 1,385 பேர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. மூவர் மாண்டனர்.

சந்தேகத்திற்குரிய வெப்ப தாக்க சம்பவங்களில் அதிகமானவை ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டன. அங்கு 4,055 சம்பவங்கள் ஏற்பட்டன.

மகாரா‌ஷ்டிரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வெப்ப தாக்கத்தால் ஆக அதிகமான மரணங்கள் பதிவாயின. இரண்டு மாநிலங்களிலும் மூவர் வெப்ப தாக்கத்தால் மாண்டனர்.

தெலுங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒருவர் வெப்ப தாக்கத்துக்குப் பலியாயினர்.

குறிப்புச் சொற்கள்