இந்தியாவில் உணவு விநியோக நிறுவனமான Swiggy, இவ்வாண்டு வாடிக்கையாளர்கள் ஆக அதிகமாக ஆர்டர் செய்த உணவு வகைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்நிறுவனத்தின் செயலியில் ஆக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கோழி பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
"நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டது. அதாவது, நொடிக்கு 2.28 பிரியாணி ஆகும்," என்று Swiggy செயலியின் அறிக்கை தெரிவித்தது.
கோழி பிரியாணிக்கு அடுத்தடுத்த நிலைகளில் மசாலா தோசை, கோழி 'ஃபிரைட் ரைஸ்', பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான் ஆகியவை வந்தன.
இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை, குலாப் ஜாமுன் ஆக அதிகமாக இவ்வாண்டு 2.7 மில்லியன் முறை ஆர்டர் செய்யப்பட்டது.


