உலகப் பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்தைப் பிடித்தது இந்தியா

உலகப் பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடத்தைப் பிடித்தது இந்தியா

1 mins read
22b93164-db18-437d-8a93-fea2e5944d6c
வேகமாக வளர்ச்சி கண்டு வரும் முதலீட்டாளர்களாலும் வலுவான பெருநிறுவன வருவாயாலும் இந்திய பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: உலகப் பங்குச் சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியப் பங்குச்சந்தை பிடித்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தையின் மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$5.8 டிரில்லியன்) அதிகரித்ததன் மூலம், 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஹாங்காங் பங்குச்சந்தையை அது பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியதாகத் புளூம்பெர்க் நிறுவனம் திரட்டிய தரவுகளின்வழி தெரியவந்துள்ளது.

வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கைச் சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரம்பை முதல் முறையாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று கடந்தது.

சீனாவின் ஆக செல்வாக்குமிக்க, புத்தாக்கத் திறனுடைய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள ஹாங்காங் பங்குச் சந்தை, வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ள வேளையில் இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்