தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் தொடரும்: ராணுவ அதிகாரி

1 mins read
bfce053d-a04a-4aa6-a774-1d6f128bfe22
ஸ்ரீநகரில் காவலில் இருக்கும் பாதுகாப்புப் படைகள். - கோப்புப் படம்: இபிஏ

ஸ்ரீநகர்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று இந்தியாவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மே 18) உறுதிப்படுத்தினார்.

போர்நிறுத்தம் தற்காலிகமானது என்றும் போர் மீண்டும் தொடரும் என்றும் வதந்தி இருந்துவந்தது. அதுகுறித்துப் பேசிய ராணுவ அதிகாரி, “ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) ஒப்புக்கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்பில் இருப்பதற்குக் கெடு ஏதும் கிடையாது,” என்றார்.

இருநாட்டு டிஜிஎம்ஓ அதிகாரிகளிடையே புதிய பேச்சுவார்த்தை எதற்கும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீதான நடவடிக்கைகள் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக இம்மாதம் 12ஆம் தேதி கூறியிருந்தார். அணுவாயுத மிரட்டல்கள், ஏதேனும் அம்சத்தைப் பகடைக்காயாக வைத்துக்கொண்டு விடுக்கப்படும் மிரட்டல்கள் (blackmail) சகித்துக்கொள்ளப்படாது என திரு மோடி வலியுறுத்தியிருந்தார்.

இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி தரப்படும் என்றும் திரு மோடி எடுத்துரைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்