பெண் எம்.பி.க்கள்: பின்தங்கியுள்ள இந்தியா

புதுடெல்லி: பெரிய பொருளியலைக் கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்தமட்டில், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியா கடைசி இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிகமான மக்களை ஓர் எம்.பி. பிரதிநிதிப்பதும் இந்தியாவில்தான் என்று ‘எஸ்பிஐ ரிசர்ச்’ ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் 17வது மக்களவை உறுப்பினர்களில் 14.4 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். இது மற்றப் பெரிய பொருளியல் நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவு.

மெக்சிகோ எம்.பி.க்களில் 48.2 விழுக்காட்டினர் பெண்கள். அதுபோல், பிரான்ஸ் (39.7%), இத்தாலி (35.7%), பிரிட்டன் (32%), ஜெர்மனி (30%) ஆகிய நாடுகள் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பதில் இந்தியாவைக் காட்டிலும் மேலான நிலையில் உள்ளன.

சுவீடன், நார்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷ் எம்.பி.க்களில் 21 விழுக்காட்டினர் பெண்கள்.

பெரிய பொருளியல் நாடுகளில் ஜப்பான் மட்டுமே இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. அந்நாட்டு எம்.பி.க்களில் 10 விழுக்காட்டினர்தான் பெண்கள்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 23.6 விழுக்காடாக இருக்கிறது.

வேட்பாளர்களை நிறுத்துவதில் ஆண் - பெண் பாகுபாடு காட்டுவதே நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக வேட்பாளர்களில் 12.6 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். அதுபோல், காங்கிரஸ் கட்சியும் 12.8 விழுக்காட்டினர்தான் பெண் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அத்தேர்தலில் அதிகபட்சமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் 37.1% பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்நிலையில், ஏழு கட்டங்களாக நடக்கும் 2024 பொதுத் தேர்தலிலும் பெரிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தத் தயங்குவதால் 18வது மக்களவையிலும் பெண் பிரதிநிதித்துவத்தில் பெரிதும் மாற்றமிராது எனச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!