இந்தியா: மிகுந்த தேவையுள்ள 35 மருந்துகளின் விலை குறைப்பு

1 mins read
a5724e9b-2c4a-4561-968f-f062c4641c9a
தேசிய மருந்துப்பொருள் விலைவகுப்பு ஆணையம் அம்மருந்துகளுக்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. - மாதிரிப்படம்

புதுடெல்லி: முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் விற்கும் அதிகத் தேவையுள்ள 35 மருந்துகளின் விலையை இந்திய அரசு குறைத்திருப்பது நோயாளிக்கு நிம்மதி அளிக்கலாம்.

அழற்சி, இதயநோய், நுண்ணுயிர், நீரிழிவு, மனநலம் போன்றவை தொடர்பான அம்மருந்துகளின் விலை குறைக்கப்படுவதாக மத்திய வேதிப்பொருள், உரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பாராசிட்டமால், அமாக்சிசிலின், மெட்ஃபார்மின், வைட்டமின் டி உள்ளிட்ட மருந்துகளும் அவற்றில் அடங்கும்.

இந்நடவடிக்கையால் நோயாளிகள், குறிப்பாக நாட்பட்ட நோய்களால் துன்புறுவோர் சற்று நிம்மதி அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, தேசிய மருந்துப்பொருள் விலைவகுப்பு ஆணையம் அம்மருந்துகளுக்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிகாரத்துவ ஆணையின்படி, சில்லறை வணிகர்களும் மொத்த விற்பனையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலை அனைவர்க்கும் தெரியும்படி தங்கள் வளாகங்களில் வைக்க வேண்டும். அதற்கு இணங்கி நடக்காதோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்