சக்திவாய்ந்த ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

சக்திவாய்ந்த ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

சித்திரிப்புப்படம்: ஊடகம்

29 Nov 2025 - 8:13 pm

1 mins read

புதுடெல்லி: ஆசிய அளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இடம்பெற்றது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்தப் பட்டியலை வெளியிட்டது.

அதில், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியும் அண்மையில் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையும் முக்கியமான, சக்திவாய்ந்த நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 40 புள்ளிகளுடன் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இதே பட்டியலில் இந்தியாவுக்கு 38.5 புள்ளிகள் கிடைத்தன.

அனைத்துலக அளவில் இம்முறை 80.4 புள்ளிகள் பெற்று அமெரிக்கா முதல் இடத்திலும் 73.5 புள்ளிகள் பெற்று சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 4, 5, 6ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.

இதனிடையே, இந்த ஆய்வை நடத்திய லோவா நிறுவனம், இந்தியாவின் ராணுவ, பொருளியல் திறன் இவை இரண்டும் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகக் கூறியுள்ளது.

புவிசார் அரசியல் அடிப்படையில், இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் ராணுவத்திறன் மேம்பட்டுள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்