புதுடெல்லி: இந்தியாவில் ஒருவருக்கு எம்பாக்ஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பாக்ஸ் கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அந்த ஆடவர் இந்தியாவுக்குச் சென்றதாக இந்திய சுகாதார அமைச்சு செப்டம்பர் 8ஆம் தேதியன்று கூறியது.
நோய்வாய்ப்பட்டுள்ள ஆடவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அவருக்கு எம்பாக்ஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடையே எம்பாக்ஸ் கிருமி பரவக்கூடியது.
பொதுவாக அது இலேசான பாதிப்புகளை விளைவிக்கும்.
சில சமயங்களில் எம்பாக்ஸ் கிருமியால் மரணங்கள் ஏற்படுவதுண்டு.
எம்பாக்ஸ் கிருமித்தொற்றால் பாதிப்பு ஏற்படுவோருக்குச் சளிக் காய்ச்சலுடன் உடல் முழுவதும் சலம் நிறைந்த புண்கள் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்பிரிக்காவில் புதிய வகை எம்பாக்ஸ் கிருமிவகை மிக விரைவாகப் பரவியதை அடுத்து, இந்தியா உயர் விழிப்புநிலையில் இருப்பதாக தி இந்து நாளிதழ் கடந்த மாதம் தெரிவித்தது.
புதிய வகை எம்பாக்ஸ் கிருமி வகை கண்டறியப்பட்டதும் பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்தது.