இந்தியா: விமான எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்க ரூ.10,000 கோடியில் நிதியம்

இந்தியா: விமான எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்க ரூ.10,000 கோடியில் நிதியம்

2 mins read
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
0a443ec2-113f-43e6-aad2-ee2c0297f6c3
மத்​திய கிழக்குப் போர்ப் பதற்​றத்தின் விளைவாக எரிபொருள் விலை அதிகரித்ததால் விமானப் போக்குவரத்து நிறு​வனங்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: வி​மான எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க இந்திய விமானப் போக்​கு வரத்​துத் துறைக்கு ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய நிதி​யத்தை உரு​வாக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஜூன் 3) ஒப்புதல் அளித்துள்ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர்ப் பதற்​றத்தால், கச்சா எண்​ணெய் விலையும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளன. இதனால் விமானப் போக்குவரத்து நிறு​வனங்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

எனவே, போர் முடி​யும் வரை உள்நாட்டுச் சேவை வழங்கும் விமானங்​களுக்​கான எரிபொருள் விலையேற்றத்தை நிறுத்தி வைக்கும்படி இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்​பரேஷன் உள்​ளிட்ட எண்​ணெய்ச் சுத்​தி​கரிப்பு நிறுவனங்களுக்கு இந்​திய விமான நிறு​வனங்​கள் கோரிக்கை விடுத்​திருந்​தன.

இந்​நிலை​யில், புதிய நிதி​யம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தேவைக் குறைவு காரண​மாக மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் இந்திய விமான நிறு​வனங்​கள் தங்​களது விமானச் சேவை​களைக் குறைக்க வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத் தள்​ளப்​பட்​டன.

குறை​வான பயணத் தேவை, அதிக எரிபொருள் விலையால் ஏற்​பட்ட செயல்​பாட்​டுச் செல​வு​கள் உள்​ளிட்ட பல காரணங்​களால், மார்ச் மாதத்​துடன் ஒப்​புநோக்க ஏப்​ரலில் உள்​நாட்டு விமானப் போக்​கு​வரத்து 4.2 விழுக்காடு குறைந்​து, ஏறக்குறைய ரூ.1.38 கோடி​யாகப் பதி​வானது. மே மாதம், உள்​நாட்டு விமான நிறு​வனங்​களுக்​கான எரிபொருள் விலை கிலோ லிட்​டருக்கு ரூ.8,289.04 (அதாவது 8.56 விழுக்காடு) உயர்ந்து, ரூ.1,04,927.18 ஆகப் பதிவானது.

இவ்வேளையில், டெல்​லி-என்​சிஆர் (ஹரி​யா​னா, ராஜஸ்​தான், உத்தரப் பிரதேசம்) சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத எரிசக்திப் போக்​கு​வரத்தை ஊக்​குவிக்​க​வும் ரூ.9,585 கோடி மதிப்​பிலான ஈராண்டுத் திட்​டத்​துக்கும் மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்