இந்தியா: எட்டாண்டுகளில் இல்லாத அளவு நெல் உற்பத்தி குறைவு

இந்தியா: எட்டாண்டுகளில் இல்லாத அளவு நெல் உற்பத்தி குறைவு

1 mins read
f076b2ad-84c1-40da-a2e9-f109694e366c
சராசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளதால் நெல் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023/24ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி குறைவாக இருக்கும் என எதிபார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில், முந்திய ஆண்டைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி 1.3 விழுக்காடு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் ஆக அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் பாசுமதி தவிர்த்த மற்ற வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதனையடுத்து, உலகளவில் அரிசி விலை அதிகரித்தது.

இதனிடையே, 2024 ஜூன் மாதத்துடன் முடியும் ஆண்டில் நெல் உற்பத்தி 123.8 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறையும் என்றும் அதே நேரத்தில் கோதுமை உற்பத்தி 112 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வேளாண், விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சு வியாழக்கிழமை (பிப்ரவரி 29) தெரிவித்தது.

விளைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் பாசுமதி தவிர்த்த வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு மேலும் நீட்டிக்கக்கூடும்.

இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதால் உணவுப்பொருள்களின் விலை மேலும் உயராமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் அரசாங்கம் முயலும்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஅரிசிஉற்பத்திஏற்றுமதிவேளாண்மை