இந்தியா, சவூதி நாடாளுமன்ற நட்புணர்வுக் குழு அமைக்கப்படும்: மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா

1 mins read
a83a92d4-8651-4dcf-aed2-625fa50cc2bf
 ஓம்.பிர்லா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்குமான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் நாடாளுமன்ற நட்புணர்வுக் குழு அமைக்கப்படும் என இந்திய மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சவூதி உயர்மட்டக் குழு ஒன்று திரு ஓம் பிர்லாவைச் சந்தித்துப் பேசியது. இது, இரு நாடுகளுக்கு இடையேயான அரசுத் தந்திரம், இரு தரப்புக்கும் இடையே முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது என்றும் இதன்மூலம் ஆழமான புரிதல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளும் வலுவான ஒத்துழைப்பு நிலவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளின் நாடாளுமன்றக் குழுக்களுக்கிடையே வழக்கமான செயல்பாடுகள் நீடிக்க திரு ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.

இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பழமையான சமய, கலாசார, பொருளியல் தொடர்புகளை எடுத்துரைத்த சபாநாயகர் ஓம்.பிர்லா, கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் உத்திபூர்வச் செயல்பாடுகளால் பங்காளித்துவம் அதிகரித்துள்ளது என்றார்.

சவூதி அரேபியாவில் உள்ள பெரும் இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்த திரு ஓம் பிர்லா, இந்திய புலம்பெயர்ந்தோர் கடின உழைப்பு, ஒழுக்கம், பொருளியலுக்காக அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் உலக அளவில் மரியாதை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

கலாசாரப் பரிமாற்றங்கள் ஆழப்பட்டு வருவதாகவும் சவூதியில் யோகாவுக்கு அதிகரித்து வரும் அங்கீகாரம் இக்கூற்றை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்