தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: சாடும் இந்தியா

1 mins read
d5573293-2693-4179-994d-e17ec600b07b
யோஜ்னா படேல். - படம்: ஊடகம்

நியூயார்க்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என்பதை அம்பலப்படுத்தி உள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளித்துள்ளதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐநா பேரவைக்கான இந்தியாவின் நிரந்தரத் துணைப் பிரதிநிதி யோஜ்னா படேல், பாகிஸ்தான் அமைச்சரின் மேற்குறிப்பிட்ட ஒப்புதல் வாக்குமூலம் யாருக்கும் எந்தவித வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

“பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, பயிற்சியுடன் கூடிய நிதியும் அளித்திருப்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இதை உடனுக்குடன் தற்போது அறிந்துள்ளனர்.

“2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில்தான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்,” என்றார் யோஜ்னா படேல்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், அரசாங்கங்கள் இந்தியாவுக்கு அளித்த ஆதரவைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், உலக நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதைக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாக யோஜ்னா படேல் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்