புதுடெல்லி: ராணுவத்துக்காக பல்வேறு நாடுகள் அதிகம் செலவிடுகின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானைவிட இந்தியா தனது ராணுவத்துக்கு ஒன்பது மடங்கு அதிகமாகச் செலவிடுவதும் தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக சில நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்டாக்ஹோம் அனைத்துலக ஆராய்ச்சி நிறுவனம் ராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் செலவிடும் தொகை தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 997 பில்லியன் டாலர் தொகையைத் தனது ராணுவத்துக்குச் செலவிடுகிறது.
314 பில்லியன் டாலருடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும், ஜெர்மனி நான்காம் இடத்திலும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
86 பில்லியன் டாலருடன் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இங்கிலாந்து, சவூதி அரேபியா, உக்ரேன், பிரான்ஸ், ஜப்பான் ஆகியவை ஆறு முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு 10 பில்லியன் டாலர் மட்டுமே செலவிடுகிறது. அந்நாடு 29வது இடத்தில் உள்ளது.