விமானப் பயணங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் 16 பில்லியன் வெள்ளி செலவு செய்யவுள்ளது.
விமான நிறுவனங்கள் நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வாங்கவுள்ளதால் அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகச் செலவு செய்கிறது இந்தியா.
டெல்லி, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்கள் போதுமான அளவு ஓடுபாதைகளும், விமானங்கள் நிறுத்த இடமில்லாமலும் தவித்து வருகின்றன.
அதனால் அவற்றை மேம்படுத்த இந்தியா எண்ணம் கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 220 விமான நிலையங்களை கட்டவும் இந்தியா முடிவெடுத்துள்ளது. தற்போது அங்கு 148 விமான நிலையங்கள் உள்ளன.
விமானப் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்து வருவதும் விமானப் போக்குவரத்திற்கான நடுவமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தியா அறிந்துள்ளதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.