ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

1 mins read
4a383232-1bb2-4a27-a0e4-7a35d401e60e
பர்வதனேனி ஹரிஷ். - கோப்புப் படம்: இந்தியா ஸ்ட்ரேடெஜிக்

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்வைத்துள்ள கருத்துகளை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் பர்வதனேனி ஹரிஷ் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலக அரங்கில் தொடர்ந்து சாடி வருகிறது பாகிஸ்தான். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற கருத்தைத் தங்களால் ஏற்க இயலாது என்றும் அந்நாடு கூறுகிறது.

குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் என்பது ஐநா பாதுகாப்பு மன்றம் கவனத்தில் கொண்டுள்ள, அனைத்துலக அளவிலான அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சை என்பதே பாகிஸ்தானின் வாதம். இதையடுத்து, பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தேவையற்ற கருத்துகளைக் கூறுவதாகக் குறிப்பிட்டார் பர்வதனேனி ஹரிஷ்.

மேலும், தனது அரசியல் ஆதாயத்துக்காக ஐநா சபையின் முறைசாராக் கூட்டத்தை பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இருக்கும்,” என்று பர்வதனேனி ஹரிஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்