புதுடெல்லி: 2029ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்று ஹரியானா முதல் அமைச்சர் நயப் சிங் சைனி கூறியுள்ளார்.
ஹரியானாவின் ரோத்தக் மாவட்டம், கராவர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல் அமைச்சர், “பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின்கீழ், 2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாவதில் வெற்றி காணும். 2029ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும் உருவெடுக்கும்,” என தெரிவித்து உள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான நான்கு தூண்களாக உள்ள ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்தலில், மத்திய அரசு தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.