புதுடெல்லி: சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் சமநிலையில் இல்லை என்பதற்கு இந்தியத் தொழிற்சாலைகள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
பெரிய இயந்திரங்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
மேலும் இந்தியாவுக்குத் தேவையான மின்னணு உதிரிபாகங்களும் பொருள்களும் அங்கிருந்து வருகின்றன.
மின்சார வாகனத் தொழிற்சாலைக்குச் சீனாவிலிருந்து அரிதான கனிமக் காந்தங்கள் தேவைப்படுகின்றன.
அதே நேரத்தில் இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சீன மருந்துப் பொருள்களைச் சார்ந்துள்ளனர்.
சீனாவின் கை பிடித்து ஊன்றி நிற்கும் நிலையிலிருந்து விடுபட இந்தியா பல ஆண்டுகளாக முயன்று வருகிறது .ஆனால், காலம் செல்லச் செல்ல இந்தியா கூடுதல் பொருள்களைச் சீனாவிடமிருந்து வாங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பரிமாற்றம் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து, ஆண்டுக்கு 151 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
ஆனால் இந்த இருநாட்டு வணிகம் முன்னெப்போதையும் விட அதிக சமநிலையற்றுப் போயுள்ளது. இந்தியா இப்போது சீனாவுக்கு விற்பதை விட ஏறக்குறைய ஏழு மடங்கு அதிகமாக அங்கிருந்து பொருள்களை வாங்குகிறது.
இந்தியா, சீனா ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையில் உறைந்து போயிருந்த போது கூட இந்த ஏற்றம் வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் இமயமலை எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் .இது உயர்மட்ட அரசதந்திர முன்னெடுப்புகளைத் திடீரென முடிவுக்குக் கொண்டுவந்தது.
சனிக்கிழமையின்போது சீன அதிபர் ஸி ஜின்பிங், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் அடியெடுத்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தச் சமநிலையின்மை, கடினமான சிக்கலை உருவாக்குகிறது.
இந்தியாவின் தொழில்துறை குறிக்கோள்கள் சீனப் பொருள்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. அதே வேளையில் இந்தச் சார்புநிலை இந்தியாவைப் பல்வேறு அபாயங்களுக்கு ஆளாக்குகிறது என்பதோடு, இந்திய நிறுவனங்கள் சீனப் போட்டியாளர்களுடன் போட்டியிடத் தேவையான அளவை அடைவதையும் கடினமாக்குகிறது.
தற்போது, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் எரிசக்திச் செலவுகளை அதிகரித்து வரும் நிலையில், சீன இறக்குமதிகள் இந்தியாவின் அனைத்துலக வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்தி அதன் நாணயத்தை பலவீனப்படுத்துகின்றன.
இந்த விவகாரங்கள் தொடர்பிலான பதற்றம், ஜி20 நாடுகளின் பொருளியல் அதிகாரிகளின் கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதிப் பிரச்சினை காட்டிலும் பொருளியல் உறவு சிக்கலாக இருக்கக்கூடும் எனக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

