தொலைநோக்குத் திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னேற இந்தியா, உஸ்பெகிஸ்தான் இணக்கம்

தொலைநோக்குத் திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னேற இந்தியா, உஸ்பெகிஸ்தான் இணக்கம்

2 mins read
3e1604b5-dba3-444a-82ef-0a6d497e49b4
இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் திரு மோடி உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொண்டுள்ள நான்காவது பயணம் இதுவாகும். - படம்: பிடிஐ
multi-img1 of 2
Google News Preferred Icon

தாஷ்கண்ட்: இந்தியாவுக்கு நீண்டகால அடிப்படையில் யுரேனியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) கையெழுத்தாகின.

உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இரு நாள் பயணமாக தாஷ்கண்ட் சென்ற பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயே நேரில் வரவேற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் வணிகம், பாதுகாப்பு, எரிசக்தி, கலாசாரம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உடன்பாடுகள் எட்டப்பட்டன.

குறிப்பாக, இந்தியாவுக்கு நீண்டகால அடிப்படையில் யுரேனியம் விநியோகிக்க உஸ்பெகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

இரு நாடுகளிடையிலான தூதரக உறவு 15 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வணிகத்தை $5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கிற்கு உஸ்பெகிஸ்தானுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் நான்காவது உஸ்பெகிஸ்தான் பயணம் இதுவாகும்.

தனது பயணத்தின்போது பிரதமர் மோடி, தாஷ்கண்டில் அமைந்துள்ள முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள யோகா நிகழ்விலும் பங்கேற்ற அவர்.

தமது பயணத்தை முடித்துக்கொண்டு கிர்கிஸ்தானுக்குப் புறப்பட்ட திரு மோடி, அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்திய வம்சாவளியினருடன் உரையாடிய பிரதமர், இரு நாடுகளிடையேயான நட்புறவின் முக்கியப் பாலமாக அவர்கள் திகழ்வதாகப் பாராட்டினார்.

பிரதமர் மோடியின் இந்தப் பயணம், பொருளியல், உத்திபூர்வ உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சோவி​யத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்​பெகிஸ்​தான் கடந்த 1991-ம் ஆண்டு தனி நாடாக உதய​மானது. அந்த நாட்​டில் இயற்கை எரி​வா​யு, யுரேனி​யம், தங்​கம் உள்​ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்​துள்​ளன.

இந்​தி​யா​வில் இருந்து உஸ்​பெகிஸ்​தானுக்கு மருந்​துகள் மற்​றும் தொழில் துறைக்கு தேவை​யான இயந்​திரங்​கள் அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. அந்த நாட்​டில் இருந்து உரங்​கள், பழங்​கள் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கல்​வி, தகவல் தொழில்​துட்ப துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​கின்​றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்நரேந்திர மோடிபயணம்தற்காப்புபங்காளித்துவம்திட்டம்எரிசக்தி