அல்வார்: வெளிநாட்டு மதுபான நிறுவனங்கள் இந்தியாவின் சிக்கலான விதிமுறைகளையும் குழப்பமான சட்டதிட்டங்களையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் அந்நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை அது பட்டியலிட்டு உள்ளது.
அனைத்துலக மதுபானப் பெருநிறுவனங்களான டியாஜியோ, கார்ல்ஸ்பெர்க், ஹெய்னெக்கென் ஆகிய நிறுவனங்கள் மதுபானத் தயாரிப்புத் தொழிற்சாலையை அந்த மாநிலத்தில் நிறுவியுள்ளன.
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மதுபானத்தைக் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்பது இந்தியச் சட்டம்.
அதனால், தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தாலும் அந்தந்த மாநிலத்திலேயே மதுபானத் தயாரிப்பில் ஈடுபட அதுபோன்ற நிறுவனங்களை சட்டம் கட்டாயப்படுத்துகிறது.
தமது நிறுவனம் சந்தித்து வரும் சிரமங்களை ஹெய்னெக்கென் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் சோனியா திம்மையா விளக்கினார்.
“தண்ணீர்ப் பிரச்சினை இந்தியாவில் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினை. சில நகரங்களில், தண்ணீர் விநியோகத்தைக் காட்டிலும் அதற்கான தேவை அதிகமாக உள்ளது,” என்று அவர் ராய்ட்டர்சிடம் கூறினார்.
இதற்கிடையே, ராஜஸ்தானிலும் தண்ணீர்ப் பிரச்சினை உள்ள இதர பகுதிகளிலும் தண்ணீரைப் பெருக்கும் ஆற்றலை அதிகரித்து வருவதாக அந்த மூன்று மதுபானப் பெருநிறுவனங்களும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ராஜஸ்தானில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்சினையை இந்தியா முழுவதும் அந்த நிறுவனங்கள் எதிர்நோக்குவதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

