சவூதிக்கான சேவைகளை நிறுத்திய இந்திய விமானச்சேவை நிறுவனங்கள்

சவூதிக்கான சேவைகளை நிறுத்திய இந்திய விமானச்சேவை நிறுவனங்கள்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 7:51 pm

1 mins read

புதுடெல்லி: சவூதி அரேபியாவுக்கான விமானச் சேவையை அக்டோபர் 20ஆம் தேதி வரை நிறுத்திவைத்துள்ளதாக ‘ஏர் இந்தியா’ வெள்ளிக்கிழமை(அக்டோபர் 16) அறிவித்தது.

முன்னதாக அக்டோபர் 17ஆம் தேதி வரை விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரியாத், தம்மாம், ஜெட்டா ஆகிய நகரங்களுக்கான சேவைகள் அக்டோபர் 20 வரை இயக்கப்படாது என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பயணக்கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

சவூதி அரேபியாவுக்கான விமானச் சேவைகள் அக்டோபர் 24 வரை இயக்கப்படாது என்று ‘இண்டிகோ’ நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. ‘அகாசா ஏர்’ நிறுவனம் ரியாத்துக்கான சேவைகளை அக்டோபர் 24 வரையிலும், ஜெட்டாவுக்கான சேவைகளை அக்டோபர் 21 வரையிலும் நிறுத்தி வைத்துள்ளன.

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி தலைநகர் ரியாத் விமான நிலையம் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் விமான கேப்டன் உட்பட மூவர் உயிரிழந்தனர். உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். அத்தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது

குறிப்புச் சொற்கள்
இந்தியாரத்துவிமானச் சேவைஏர் இந்தியாஇண்டிகோ