ஸ்ரீநகர்: எல்லையோரப் பதற்றச் சூழல் தணிந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்கு ஆளில்லா வானூர்தி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய, மருந்துப் பொருள்களை இந்திய வீரர்கள் விநியோகித்து வருகின்றனர்.
வீடு வீடாகச் சென்று, அங்கு உள்ளவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து, உதவிப் பொருள்களை வழங்கும் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவத்தின் இந்த உதவியானது, ஒற்றுமை, இரக்கத்தின், வலுவான வெளிப்பாடு எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள் அனைத்தும் உடனடியாக சீரமைக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

