14,300 அடி உயரத்தில் வீர சிவாஜிக்குச் சிலை வைத்த இந்திய ராணுவம்

1 mins read
ff3b9eda-7322-49fd-b6d3-9ca4c4d57ee8
கிடக்கு லடாக்கில் பங்கோங் ஏரிக்கரையில் வீர சிவாஜிக்கு வைக்கப்பட்டுள்ள சிலையுடன் இந்திய ராணுவத்தினர். - படம்: இந்திய ராணுவம் / எக்ஸ்

புதுடெல்லி: வீரத்திற்குப் பெயர்போன மராட்டிய மன்னனான வீர சிவாஜியின் சிலையை 14,300 அடி உயரத்தில் நிறுவியுள்ளது இந்திய ராணுவம்.

கிழக்கு லடாக் பகுதியில், சீன எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டி, பங்கோங் ஏரிக்கரையில் வீர சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

லே பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தின் ‘14 கார்ப்ஸ்’ படைப்பிரிவு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 26) இச்சிலையைத் திறந்துவைத்தது.

கிடக்கு லடாக்கில் சீன எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டி வீர சிவாஜிக்கு வைக்கப்பட்டுள்ள சிலை.
கிடக்கு லடாக்கில் சீன எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டி வீர சிவாஜிக்கு வைக்கப்பட்டுள்ள சிலை. - படம்: இந்திய ராணுவம் / எக்ஸ்

“வீர சிவாஜியின் அசையாத மனவுறுதியைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. அவரது வீர மரபு, அவருக்குப் பின் வந்த எல்லாத் தலைமுறையினருக்கும் ஊக்குவிப்பாகத் திகழும்,” என்று ‘14 கார்ப்ஸ்’ படைப்பிரிவைச் சேர்ந்த லெஃப்டினன்ட் ஹிதேஷ் பல்லா கூறினார்.

உத்திகளை வகுப்பதில் பண்டைய இந்திய மன்னர்களின் நுண்ணறிவைச் சமகால இராணுவச் செயற்களத்துடன் ஒருங்கிணைக்க இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்