திருமணத்தின்போது துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்ணைத் தேடும் காவல்துறை

1 mins read
3449e574-e11b-4732-a3c7-7a1be45e40b7
-

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மணப்பெண் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

சட்டத்திற்கு எதிரான அந்நடவக்கையில் ஈடுபட்டதால் மணப்பெண்ணைக் காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

கணவர் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் வானை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுடும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

சம்பவத்திற்குப் பிறகு மணப்பெண் தலைமறைவானார். அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் திருமணக் கொண்டாட்டங்களின்போது துப்பாக்கியால் வானில் சுடும் நிகழ்வு வழக்கமானது. ஆனால், குறிதவறி குண்டு பாய்ந்து காயங்களும் சிலமுறை மரணங்களும் நிகழ்ந்துள்ளன,.

அதனால், துப்பாக்கியைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

வானை நோக்கி யார் துப்பாக்கியால் சுட்டாலும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டாலும் விசாரணை நடத்தப்படும் என்று 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்