உடல் முழுவதும் ரத்தத்துடன் நின்ற ரிஷப் பண்ட்; கொழுந்துவிட்டு எரிந்த கார் (காணொளி)

உடல் முழுவதும் ரத்தத்துடன் நின்ற ரிஷப் பண்ட்; கொழுந்துவிட்டு எரிந்த கார் (காணொளி)

1 mins read
6c538b49-5593-461d-beeb-dbc1f051ebc4
ரிஷப் பாண்ட்டின் கார் எரிந்து முற்றிலும் கருகியிருந்தது. படம்: இணையம் -

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற மெர்சடிஸ் கார் விபத்துக்குள்ளானது.

அதிகவேகத்தில் சென்ற கார் சாலைத் தடுப்பில் மோதிய காட்சி அருகில் இருந்த சிசிடிவி கண்காணிப்புப் புகைப்படக் கருவியில் பதிவானது.

மோதிய கார், தீப்பிடித்துக்கொண்டது.

காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து ரிஷப் தப்பித்தார்.

அவருக்கு நெற்றி, கால், கை மணிக்கட்டு, முதுகு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டது.

காயமடைந்து உடல் முழுவதும்ரத்தம் வழிந்தோடிய நிலையில் ரிஷப் தமது மெர்சடிஸ் கார் எரிவதைப் பார்க்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீபோல பரவின.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் மாவட்டத்தில் உள்ள ரூர்கி எனும் இடத்தின் இருகே விபத்து நிகழ்ந்தது.

குடும்பத்தாருடன் புத்தாண்டைக் கழிப்பதற்காக ரிஷப் டெல்லியில் இருந்து ரூர்கியில் உள்ள தமது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது கண் அயர்ந்ததால் அவர் அதன் கட்டுப்பாட்டை இழந்தார் என்று காவல்துறையினர் கூறினர்.