புதுடெல்லி: இந்தியாவின் பொருளியல் இந்த ஆண்டில் சற்று மந்தமாக இருக்கும் என அனைத்துலகப் பணநிதியம் கணித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அனைத்துலகப் பணநிதிய நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் மந்தமடையலாம் என்று கூறியுள்ளார்.
உலக நாடுகள் 2025ஆம் ஆண்டில் நிச்சயமற்ற பொருளியல் தன்மையைக் கொண்டிருக்கும். இருப்பினும், பொருளியல் வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அமைவதாக இருக்கும் என்று அவர் கூறினார்.