தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியப் பொருளியல் பாதிக்காது: நிபுணர்கள்

2 mins read
004699f8-ec43-45ad-9c5f-f153da22aae3
குஜராத்தின் கண்ட்லாவில் தீனதயால் துறைமுக ஆணையத்தில் பொருள்கள் சரக்குக் கப்பலில் ஏற்றப்படுகின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியப் பொருளியல் அதிகளவு பாதிக்காது என நிபுணர்கள் நம்புகின்றனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

https://www.straitstimes.com/asia/south-asia/india-sees-no-hit-to-projected-growth-from-us-tariffs-economists-remain-sceptical

புதுடெல்லி: அமெரிக்காவின் வரி விதிப்பால் உலகளாவிய இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலும் 6.3 விழுக்காடு முதல் 6.8 விழுக்காடு வரையில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 70 யுஎஸ் டாலருக்குக் கீழ் இருந்தால் அது சாத்தியம் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் தனியார் பொருளியல் நிபுணர்கள் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

கோல்ட்மேன் சேக்ஸ், 2025/26 நிதியாண்டின் பொருளியல் 6.1 விழுக்காடாக இருக்கும் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 26 விழுக்காடு வரி விதித்துள்ளது. சீனா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு இதைவிட அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஆசியாவின் முக்கிய பங்குகள் ஏப்ரல் 7ஆம் தேதியன்று வீழ்ச்சியடைந்தன.

இந்தியாவின் வைர உற்பத்தியில் மூன்றில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் துறை அதிக அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்காவின் வரி விதிப்பின் பாதிப்பை மதிப்பிடுவதற்கு ஏற்றுமதி சங்கங்கள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன என்று மற்றொரு இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வட்டிக்குக் கழிவு, பரவலான ஆதரவுத் திட்டங்கள், வங்கிக் கடன் உட்பட ஏற்றுமதிக்கு உதவும் நான்கு உத்தேச திட்டங்களை நிதி அமைச்சிடம் வர்த்தக அமைச்சு முன்வைத்துள்ளது.

“ஏற்றுமதிக்கு எதிரான வரி விதிப்பின் விளைவுகளை இன்னமும் ஆராய்ந்து வருகிறோம். அதற்கு ஏற்ப தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்