தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய டெல்லி - குருகிராம் இடையே சுரங்கப்பாதை அமைக்க இந்திய அரசு ஆலோசனை

1 mins read
27d782d2-7dab-457a-87cf-1aba4a30a2b7
தேசிய தலைநகர் வட்டாரத்தில் பயண நேரத்தைக் கணிசமாக குறைத்து, பயணத்தை எளிதாக்குவதே திட்டத்தின் நோக்கம். - படம்: புளூம்பெர்க்

இந்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்த பரிந்துரையின்படி, மத்திய டெல்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கிலிருந்து குருகிராம் வரை புதிய சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.

தேசிய தலைநகர் வட்டாரத்தில் (NCR) பயண நேரத்தைக் கணிசமாக குறைத்து, பயணத்தை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.

தற்போது, ஆலோசகர்களின் உதவியுடன் இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

மாசுபாடு, போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க சுரங்கப்பாதை உதவும்

இந்தச் சுரங்கப்பாதை கட்டப்பட்டால், டெல்லிக்கும் குருகிராமுக்கும் இடையிலான வழக்கமான ஒரு மணி நேரப் பயணம் வெறும் 10-15 நிமிடங்களாகக் குறையக்கூடும். இது, போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் எவருக்கும் ஒரு பெரிய வெற்றியாகும்.

மேலும், டெல்லியில் ஆண்டின் 40%க்கும் அதிகமான நாள்களில் காற்றுத்தரம் மோசமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் சாலைகளைச் சீரமைக்கவும், தேசிய தலைநகர் வட்டாரம் முழுவதும் மாசுபாட்டைக் குறைக்கவும் அரசாங்கத்தின் பெரிய முயற்சியின் (ரூ.1 டிரில்லியன் ஆதரவுடன்) ஒரு பகுதியாகும்.

குறிப்புச் சொற்கள்