புதுடெல்லி: அபுதாபியில் பணியாற்றி வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் (30) என்பவருக்கு, லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் பரிசாகக் கிடைத்துள்ளது.
இது இந்திய மதிப்பில் ரூ.36 கோடியாகும்.
இதுகுறித்து சந்தீப் குமார் கூறுகையில், “துபாய் டிரைடாக்ஸில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறேன்.
“அண்மையில் நான் வாங்கியிருந்த ஒரு லாட்டரிச் சீட்டு ஒரே நாள் இரவில் என்னை கோடீஸ்வரனாக்கி விட்டது.
“என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நான் சந்திப்பது இதுவே முதல் முறை.
“கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று 200669 என்ற எண் கொண்ட லாட்டரிச் சீட்டை வாங்கினேன்.
“செப்டம்பர் 3ஆம் தேதி நடந்த குலுக்கலில் எனது சீட்டுக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாகக் கிடைத்துள்ளதாக தொகுப்பாளர் ரிச்சர்ட் அறிவித்தார்.
“அப்போது, ‘சுத்துதே சுத்துதே பூமி’ என பாட்டுப் பாடி, நடனமாடத் தோன்றியது. என் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
உத்தரப் பிரதேசத்தில்தான் தனது மனைவியும் இரண்டு சகோதரர், ஒரு சகோதரியும் வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை வென்றுள்ள நிலையில், எனது குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க இந்தியாவுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளேன். அங்கு சொந்தத் தொழிலையும் தொடங்க விரும்புகிறேன்,” என்று சந்தீப் குமார் பிரசாத் தெரிவித்துள்ளார்.

