மகாராஷ்டிர அரசின் முடிவிற்கு இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு

2 mins read
8e45a891-559f-4d0d-b177-48f2716cc6a1
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம் என அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என்று இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்

மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில (அலோபதி) சிகிச்சை அளிக்க மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளதற்கு இந்திய மருத்துவச் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மகா​ராஷ்டிர மருத்​துவ மன்றச் சட்​டத்​தில் மேற்​கொள்​ளப்​பட்​ட திருத்​தங்​களின்​படி, மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவுசெய்த ஆயுர்​வேத, சித்த, ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளை பரிந்​துரைக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதனை எதிர்த்து இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது. ஆயினும், 2015ஆம் ஆண்​டில் அவ்வழக்கை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

அதனைத் தொடர்ந்து, மகா​ராஷ்டிர சுகா​தார அறி​வியல் பல்​கலைக்​கழகம் சார்​பில் கடந்த 2016ஆம் ஆண்டு ‘சிசிஎம்பி’ என்று மருந்​தி​யல் சான்றிதழ் படிப்பு தொடங்​கப்​பட்​டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 30ஆம் தேதி மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அரசாணையில், “நவீன மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்​பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்​து​வர்​கள் மகா​ராஷ்டிர மருத்​துவ மன்றத்தில் முறைப்​படி பதிவுசெய்​ய​லாம். அதன்​பிறகு அவர்​கள் அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளைப் பரிந்​துரைக்கலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு, “பல்​வேறு எம்​பிபிஎஸ் மருத்​து​வர்​கள், தங்​கள் நோயாளி​களுக்கு சித்த, ஆயுர்​வேத, ஹோமியோபதி மருந்​துகளைப் பரிந்​துரை செய்​கின்​றனர். நாங்​கள் முறை​யாக மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவுசெய்​துள்​ளோம். எங்​கள் நோயாளி​களுக்குத் தேவை​யான அலோபதி மருந்​துகளைப் பரிந்​துரை செய்ய எங்​களுக்கு உரிமை இருக்​கிறது. மகா​ராஷ்டிர அரசின் முடிவை முழு​மனத்தோடு வரவேற்​கிறோம்,” என்று ஹோமியோபதி மருத்​து​வர்​கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்​திய மருத்​து​வச் சங்கத்தின் மகா​ராஷ்டிரத் தலை​வர் சந்​தோஷ், “மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மூத்த அரசியல் தலைவர்கள் பலர் ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி​களை நடத்​துகின்​றனர். அவர்​களின் அழுத்​தத்​தால் மகா​ராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளி​யிட்டுள்ளது. அதனை எதிர்த்துச் சட்​டரீ​தி​யாகப் போராடு​வோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்