தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர்நிறுத்த மீறல் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

2 mins read
2ba905a6-9ab7-4983-a8df-a4b9ba10862d
காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய ராணுவத்தினர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

புதுடெல்லி: இவ்வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இதன் தொடர்பில் போர்நிறுத்த உடன்பாட்டை மீற வேண்டாம் என இந்தியா பாகிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 11) எச்சரிக்கை விடுத்துள்ளதாக உயர் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டை இரு நாடுகளும் ஒன்று மற்றதை சனிக்கிழமை (மே 10) குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இது குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரியான ராணுவத் தளபதி கருத்துரைத்தார்.

அணுவாற்றல் கொண்ட இரு நாடுகளும் நான்கு நாள்களாக கடும் போர் புரிந்த நிலையில், சனிக்கிழமை போர்நிறுத்த உடன்பாடு அறிவிக்கப்பட்டது. அந்த நான்கு நாள் போரில் இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் மீது ஏவுகணைகள், வானூர்திகள் மூலம் தாக்கிக்கொண்டதில் கிட்டத்தட்ட 70 பேர் மாண்டனர்.

போர் அபாய அளவுக்கு விரிவடைந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், அரசதந்திர முயற்சிகளும் அமெரிக்கா கொடுத்த நெருக்குதலும் போர்நிறுத்தத்திற்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், போர்நிறுத்த அறிவிப்பு வந்த சில மணிநேரத்திலேயே இந்திய ஆளுமையில் உள்ள காஷ்மீர் பகுதியில் பீரங்கித் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இருள் சூழ்ந்த போர்ப் பகுதிகளில் ஆகாய தற்காப்பு சாதனங்களின் வெடிப்பு சத்தம் அதற்கு முந்தைய இரு நாள்களைப்போல் ஒலித்ததாக உள்ளூர் அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் தெரிவித்தனர்

இதன் தொடர்பில் போர்நிறுத்த மீறலுக்கு சிறந்த முறையில் பதிலடி கொடுக்கும்படி, ராணுவத் தளபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ நடிவடிக்கைகளின் பொறுப்பு அதிகாரி லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்