கைப்பேசிக்காக நீர்த்தேக்கத்திலிருந்த 2.1 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி

கைப்பேசிக்காக நீர்த்தேக்கத்திலிருந்த 2.1 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி

1 mins read
ea277e12-5888-4492-a207-3f7ba9c178b9
படம்: டுவிட்டர் -
Google News Preferred Icon

இந்தியாவில் நீர்த்தேக்கம் ஒன்றில் தவறவிட்ட கைப்பேசிக்காக கிட்டத்தட்ட 2.1 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார் ஓர் அதிகாரி.

அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக அந்த அதிகாரி தற்போது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சம்பவம் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பரல்காட் நீர்த்தேக்கத்தில் நடந்தது.

கைப்பேசியை நீர்த்தேகத்தில் இருந்து மீட்கத் தொடர்ந்து நான்கு நாள்களாக கிட்டத்தட்ட 2.1 மில்லியன் நீர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

கோடைகாலமான இந்த நேரத்தில் இவ்வளவு நீரை வீணடித்த அதிகாரி மீது பொதுமக்களும் கோபமடைந்தனர்.

ராஜே‌ஷ் விஸ்வாஸ் என்ற அதிகாரி கிட்டத்த 1,640 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கைப்பேசியை மே 21ஆம் தேதி தமது நண்பர்களுடன் படம் எடுக்கும் போது நீர்த்தேக்கத்தில் தவறவிட்டுள்ளார்.

கைப்பேசியை எடுக்க முக்குளிப்பாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டனர். இருப்பினும் கைப்பேசியை எடுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து அதிகாரி நீரை நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார். வெளியேற்றப்பட்ட நீரால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும் அதை அவ்வட்டார விவசாயிகள் மறுத்துள்ளனர். இச்சம்வத்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு நீர் வெளியேற்றப்பட்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த கைப்பேசி இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்