இங்கிலாந்தில் சதுரங்கக் களத்தில் சாதிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுமி போதனா

இங்கிலாந்தில் சதுரங்கக் களத்தில் சாதிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுமி போதனா

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

29 Sep 2026 - 8:24 pm

1 mins read

சமர்கண்ட்: இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன் சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார்.

அண்மையில், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட 11 வயது போதனா, ஆக இளம் வயதில் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் அவரது பெற்றோர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சதுரங்கம் விளையாடத் தொடங்கிய போதனா, இணையவழியிலும் சுயமாகவும் பயிற்சி பெற்று தனது திறமையை வளர்த்துக்கொண்டதன் பலனாக, இன்று சாதனையாளராக மாறியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் 60 வயதான மூத்த ‘கிராண்ட் மாஸ்டர்’ பீட்டர் வெல்சைத் தோற்கடித்தார் போதனா. அதன்மூலம் ஒரு ‘கிராண்ட் மாஸ்டரை’ வீழ்த்திய மிக இளம் வீராங்கனை என்ற அமெரிக்காவின் கரிசா யிப்பின் சாதனையை முறியடித்தார். நாளடைவில், பிரிட்டனின் ஆக இளம் வயது சதுரங்க வெற்றியாளராகவும் உருவெடுத்தார்.

இந்தச் சாதனை தமக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள போதனா, இத்துடன் நிறுத்திவிடாமல் அனைத்துலக சதுரங்க அரங்கில் தொடர்ந்து பல வரலாற்றுச் சாதனைகளைப் படைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டையும் சமநிலையுடன் கையாளும் இந்த இளம் வீராங்கனைக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்