16 வயதில் ‘சிஏ’ தேர்ச்சி; இந்திய வம்சாவளி கின்னஸ் சாதனை

16 வயதில் ‘சிஏ’ தேர்ச்சி; இந்திய வம்சாவளி கின்னஸ் சாதனை

1 mins read
24645d39-a162-4e9e-a0e7-77dc650c0d1c
கின்னஸ் சாதனை படைத்த லட்சுமணன் மெய்யப்பன். - படம்: லட்சுமணன் மெய்யப்பன்
Google News Preferred Icon

துபாய்: துபாயில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமணன் மெய்யப்பன் என்ற மாணவர் ‘சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்’ (சிஏ) பட்டம் முடித்து கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

கின்னஸ் பதிவின்படி லட்சுமணன் மெய்யப்பனின் தொழில்முறை தகுதிச் சாதனை 2021ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி துபாயில் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவரது வயது 16 ஆண்டுகள்,141 நாள்கள் எனக் கின்னஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உலகச் சாதனை 2026ஆம் ஆண்டு ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

10ஆம் வகுப்பு முடித்தபோது, விடுமுறைக் காலத்தைப் பயன் உள்ளதாக மாற்ற முடிவு செய்தார் லட்சுமணன் மெய்யப்பன்.

அப்போது கொவிட் பெருந்தொற்றும் பரவிய காலம். இதனால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் அவர் கணக்கியல் படிப்பில் கவனம் செலுத்தினார். இதற்கு அவரது தாயாரும் உதவினார்.

லட்சுமணன் மெய்யப்பனின் தாயும் ‘சிஏ’ முடித்தவர். மகனுக்குத் தேவையான உதவிகளை அவர் செய்தார்.

‘சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்’ படிப்பை முடித்த பிறகு தற்போது நிதித்துறையில் முதுநிலைப் படிப்பைப் படித்து வருகிறார் லட்சுமணன் மெய்யப்பன்.

21 வயதாகும் லட்சுமணன் மெய்யப்பன் துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில், முதுநிலை ஆராய்ச்சி நிபுணர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
கின்னஸ் சாதனைகணக்குகள்நிதி