நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ‘ஐபோன் 18’ வாங்கிய இந்திய மக்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ‘ஐபோன் 18’ வாங்கிய இந்திய மக்கள்

படம்: இந்து தமிழ் திசை

19 Sep 2026 - 7:48 pm

2 mins read

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஐபோன் 18 புரோ’ மற்றும் ‘புரோ மேக்ஸ்’ திறன்பேசிகளின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் விற்பனை நிலையங்களில் அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்த புதிய மாடல்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இணையத்தளம் மூலமாகவும், இந்தியாவில் உள்ள அதிகாரபூர்வ விற்பனையகங்கள் மூலமாகவும் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிய மாடல்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

புதிய ஐஃபோன் வெளியீட்டின் அன்றே, அந்தக் கைப்பேசியை வாங்குவதற்கு திருவிழாக் கூட்டம் போல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஐஃபோன் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூடினர்.

முந்தைய மாடல்களைவிட இதில் ‘ஐஓஎஸ் 27’ இயங்குதளம், அதிநவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட புகைப்படக்கருவி, ஏ20 புரோ சில்லு போன்ற புதிய தொழில்நுட்பங்களை ஐஃபோன்18 கொண்டுள்ளதால் இதில் ஆர்வம் காட்டுவதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.

இவற்றுடன் ‘வேப்பர் சேம்பர்’ (Vapor Chamber) தொழில்நுட்பம், மாறும் துளை (Variable Aperture) கொண்ட 48 மெகாபிக்சல் கேமரா ஆகிய சிறப்பம்சங்களும் இதில் அடங்கும்.

கறுப்பு, வெள்ளி, கிளேசியர், பர்கண்டி ஆகிய 4 வண்ணங்களில் இந்த போன்கள் வெளியாகியுள்ளன. ஐபோன் 18 புரோ (256ஜிபி) மாடலின் தொடக்க விலை ரூ.1,64,900 ஆகும். இதன் 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி மாடல்கள் முறையே ரூ.1,89,900, ரூ.2,39,900 மற்றும் ரூ.3,14,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்