இந்திய காவல்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்துள்ளனர்.
அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா பகுதியில் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீக்கியர்களை அதிகமாகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக மாற்றவேண்டும் என்று அம்ரித்பால் சிங் பிரசாரம் செய்து வந்தார். அவர் ஒரு பயங்கரவாதக் குழுவையும் தொடங்கினார்.
அம்ரித்பால் சிங்கின் நடவடிக்கை நாட்டில் பெரும் கலவரத்தை உண்டாக்கக்கூடும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அம்ரித்பால் சிங் அடைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
30 வயது அம்ரித்பால் சிங்கின் கைது நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்பின் சில பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


