66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் இந்திய அதிபர்

66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் இந்திய அதிபர்

2 mins read
27c9cb83-8c06-4834-90f0-1a85c5ef0dc8
பத்ம விருது பெற்ற மருத்துவர் ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி. - படம்: தினமலர்

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான பத்ம விருதுகளை இந்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 66 பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (மே 25) நடைபெற்றது.

இந்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் கலை, இலக்​கி​யம், கல்​வி, விளை​யாட்​டு, மருத்​து​வம், சமூக சேவை, அறி​வியல், பொறி​யியல், மத்​திய அரசுப் பணி, தொழில் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கு​வோர்க்கு பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்றன.

இம்முறை, ஐந்து பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.

விருது வழங்கும் விழாவில் துணை அதிபர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மத்​திய அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

சென்னையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் என். ராஜமுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த இந்தித் திரைப்பட நடிகர் தர்​மேந்​திரா சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் வழங்​கப்​பட்​டது.

தமிழக முன்​னாள் அமைச்​சர் எச்​.​வி. ஹண்​டே, தமிழகத்​தின் நீல​கிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் (மறைவு), ஜெர்​மனியைச் சேர்ந்த இசை ஆய்​வாளர் லார்ஸ் கிறிஸ்​டியன் கோச், தமிழக காவல் துறை முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி விஜயகுமார், புதுவை சிலம்​பம்​ வீரர்​ பழனிவேல்​, தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் சிவசங்​கரி, சமூக வானொலி​யின் தந்தை என்​றழைக்​கப்​படும் ஸ்ரீதர், ஓது​வார் சுவாமி​நாதன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விரு​து அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்