புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
விண்வெளி நிலையத்தினுள் சென்ற நான்கு வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். இந்த நால்வரும் 14 நாள்களுக்கு அங்கேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

