பீகாரில் ‘நிதிஷ் சேது’ பாலத்தைத் திறந்துவைத்தார் இந்தியப் பிரதமர் மோடி

பீகாரில் ‘நிதிஷ் சேது’ பாலத்தைத் திறந்துவைத்தார் இந்தியப் பிரதமர் மோடி

படம்: இந்தியப் பிரதமரின் சமூக ஊடகப்பக்கம்

21 Nov 2026 - 8:16 pm

1 mins read

ஹாஜிப்பூர்: பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவம்பர் 21) திறந்துவைத்தார்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெயரால் ‘நிதிஷ் சேது’ என அப்பாலம் பெயரிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன், முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், துணை முதலமைச்சர் விஜய் குமார் சவுத்ரி ஆகியோருடன் பிரதமர் மோடி பாலத்தில் சில நிமிடங்கள் நடந்து சென்றார். மேலும், ‘கம்சா’ துண்டை அசைத்து மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வைஷாலியின் பிதுப்பூர் வட்டாரத்தையும் பாட்னா புறநகரில் உள்ள கச்சி தர்காவையும் இணைக்கும் இந்த ஆறு வழிப் பாலம், ஏறத்தாழ 4,280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 9.76 கிலோமீட்டர் நீளமுள்ள முதன்மைப் பாலமும் 10 கிலோமீட்டர் அணுகு சாலைகளும் இதில் அடங்கும்.

இந்தப் பாலம் செயல்பாட்டுக்கு வருவதால், 40 ஆண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த மகாத்மா காந்தி சேது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்பகுதி சுற்றுலா, தளவாட மையமாக உருவெடுத்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வேளாண் விளைபொருள்கள், தொழிற்சாலைப் பொருள்களின் போக்குவரத்து எளிதாகி, வர்த்தகம் மேம்படுவதன் மூலம் பீகாரின் பொருளியல் வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
பீகார்இந்தியாபாலம்போக்குவரத்து